சீதுவையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 28 பேர் கடற்படையினரால் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைப்பு

ஏப்ரல் 10, 2020
சீதுவையில் வீடுகளில் சுய தனிமைப்படுதலை தவிர்த்து வந்த 28 பேர் கடற்படையினரால் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக பிரகடணப்படுத்தப் பட்ட இப்பிரதேசத்தல் குறித்த நபர்கள் வீடுகளில் சுயதனிமைக்குட்படுதலை தவிர்த்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
மேற்கு கடற்படை கட்டளையக புலனாய்வு பிரிவு, மரதமடு ஆலய பிரதம போதகர் , ஜா-எல பொலிஸ் மற்றும் மாவட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின்போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். 
 
கைது செய்யப்பட்ட நபர்கள் ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.