பயணங்களின் போது முக கவசம் அணிவது கட்டாயமாகும் - பொலிஸ்

ஏப்ரல் 11, 2020

ஊரடங்கு சட்டத்தின் போது பயண அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைவரும் பாதையில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று (ஏப்ரல், 11) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய தீர்மானம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று நள்ளிரவு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் முகக் கவசம் அணிந்த நிலையில் பாதையில் பயணிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணஅனைத்து ஊழியர்கள் மற்றும் சுதேச மருத்துவ துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் தங்கள் சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.