யாழ்பானத்தில் சுமார் 150,000க்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணத்தை விநியோகிக்க படையினர் உதவி

ஏப்ரல் 11, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுக்கு யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தில் உள்ள படையினர்  உதவி அளித்தனர்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி உதவி பெறுவோர், சிறுநீரக நோயாளர்கள், அங்கவீனமுற்றோர், சிரேஷ்ட பிரஜைகளுக்கான உதவி பெறுவோர் ஆகியோருக்கு நிவாரண நிதியுதவியினை பகிர்ந்தளிக்க படையினரால் உதவியளிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் இத்திட்டத்தின் ஊடாக நிதி உதவியைப் பெற்றுக் கொடுக்குமாறு  யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகள், பிரிகேட்கள், மற்றும் இராணுவ முகாம்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப அரச அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் ரூ. 5000 வழங்கப்படவுள்ளது.

அரசு அதிகாரிகளுடன் இணைந்து படையினரும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று வினியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.