கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயற்படும் பொலிஸாருக்கு மேலதிக கொடுப்பனவாக ரூ. 5,000

ஏப்ரல் 11, 2020

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னணியில் இருந்து செயற்படும் பிரதமர் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கீழ் நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அவர்களின் தன்னலமற்ற சேவையை கருத்திற்கொண்டு வெகுமதியாக ரூ. 5,000 ஐ வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11ம் திகதி முதல் கடமையில் உள்ள ஒவ்வொரு பொலிஸாருக்கும் ரூ. 5,000 ஐ வழங்குவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தினால்
இன்று (ஏப்ரல், 11) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் மற்றும் அதற்கு தகுதி பெறுவோர் தொடர்பான அறிவுறுத்தல்கள் பிராந்திய சிரேஸ்ட- பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.