கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தாமரை கோபுரம் ஒளிர்விப்பு
ஏப்ரல் 11, 2020கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று மாலை 6 45 மணியளவில் தாமரை கோபுரம் ஒளிர்விக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தன்னலம் பாராமல் சேவையாற்றும் சுகாதார, முப்படை, பொலிஸ் மற்றும் அவற்றுக்கு ஆதரவளிப்போர் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் இன்று மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தன்னலமற்ற சேவையை நாட்டுக்காக அளிக்கும் முன்னணி வீரர்களை கௌரவிப்பதற்காக இந்நடவடிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னணியில் இருந்து செயற்படும் முப்படையினர் , சுகாதாரப் பிரிவினர், பொலிஸார், மற்றும் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் அனைவரையும் கௌரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்பட உள்ளதாக இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து தன்னலமற்ற சேவையை வழங்கும் அவர்களை பாதுகாப்பது எமது கடமை என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.