7 ஆவது கெமுனு வொச் மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய காவற்படை ஆகிய இராணுவ வீரர்களால் உணவுப் பொருட்கள் விநியோகம்
ஏப்ரல் 11, 2020உடையார்காட்டு பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு அரசாங்க ஆதிகாரிகள் உணவு மற்றும் ஏனைய உலருணவு பொருட்களை விநியோகிப்பதற்கு 7 வது கெமுனு வொச் மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய காவற்படைகளை சேர்ந்த படை வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக கட்டளை தளபதி, மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலகவின் ஆலோசனைக்கமைய இப்பிரதேசத்தை சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துளைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுப்பொருட்கள் விநியோக நிகழ்வு 68ஆம் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜே.ரத்நாயக்க மற்றும் 683 பிரிகேட் கமாண்டர் கேணல் டி.ஆர்.என் ஹெட்டியராச்சி ஆகியோர் மேற்பார்வையில் இடம்பெற்றது.
683 படைப்பிரிவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இச் சமூக நலன்புரித்திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரண பொதிகளில் உலருணவு, மரக்கறிவகைகள், மசாலா பொருட்கள் என்பன அடங்கும்.