யாழில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அங்கவீனமுற்றோருக்கு படையினர் ஒத்துழைப்பு

ஏப்ரல் 11, 2020

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக படை வீரர்களினால்  யாழ்ப்பாணத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை வங்கிகளுக்கு சென்றுவருவதற்கான பெற்றுக்கொள்வதற்காக போக்குவரத்து வசதிகளை  வழங்கியுள்ளனர்.

ஏப்ரல் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான முதியோர்கள், அங்கவீனமுற்றோர் தமது ஒய்வூதியக் கொடுப்பணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய பிரதேச செயலகங்களின் ஒத்துழைப்புடன் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகம் போக்குவரத்துக்கான பேரூந்து வசதிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த சேவையினை, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, கிராம சேவை உத்தியோகத்தர்  மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வழங்கி வைத்துள்ளார்.