கடற்பரப்பில் நோய்த் தொற்றுக்குள்ளான வெளிநாட்டுப் பிரஜைக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுக்க இலங்கை கடற்படையினர் உதவி

ஏப்ரல் 12, 2020

கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றில் இருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு மருத்துவ உதவிகளை பெற்றுக் கொடுக்க இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்.

இதற்கேற்ப , இலங்கையில் செயல்படும் உள்ளூர் முகவரகத்தின் வேண்டுகோளுக்கு அமைய 38 வயதான இந்த நோயாளி கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் தரித்து நின்ற இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான 'மெர்ஸ்க் அவான்' கப்பலை நோக்கி விரைந்த கடற்படையின் இரசாயனவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால், கரைக்கு அழைத்துவரப்பட்ட குறித்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.