கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறை காற்றழுத்த சீராக்கல் அறை கடற்படையினரால் வடிவமைப்பு

ஏப்ரல் 12, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 'மறைக் காற்றழுத்த சீராக்கல் அறைகள்' இரண்டு, இலங்கை கடற்படையின் பொறியியலாளர்களினால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பணிப்புரைக்கமைய இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்புதிய வசதியானது, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களின் வருகையின்போது அவர்களிலிருந்து காற்று மூலமாக ஏனைய சாதரண நோயாளர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் காத்துக்கொள்ளும் பாதுகாப்பு பொறிமுறையை வழங்குகின்றது.

'மறைக் காற்றழுத்த சீராக்கல் அறைகள்' என்பது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு பரவும் நோய்களின் நேரடி -தொற்றுநோயைத் தடுக்க சுகாதாரத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். இது, மறை அழுத்த கொண்டுள்ள காற்றினை அறையில் இருந்து உறிஞ்சி வெளியேற்றி சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு வழங்குவதுடன் மாசுபட்ட மற்றும் தொற்றுக்கிருமிகள் அடங்கியுள்ள காற்றினை வெளியேற்ற உதவுகின்றது.

காற்றின் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ள வேளையில் வைத்தியசாலைகளில் இத்தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது