ராகம மற்றும் வெலிசர வைத்தியசாலைகளில் இருபத்தி ஏழு சுகாதாரப் பணியாளர்கள், முலாங்கவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பிவைப்பு

ஏப்ரல் 12, 2020
  • சுதுவெல்ல பிரதேச கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டதால் இரண்டு வைத்தியசாலை அதிகாரிகளும் பாதிப்பு

ராகம போதனா வைத்தியசாலை மற்றும் வெலிசர சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலை ஆகியவற்றின் அதிகாரிகள் இருவர் மற்றும் இரு வைத்தியசாலைகளில் பணியாற்றும் 27 ஊழியர்கள் ஆகியோர் ஜா - எல, சுதுவெல்ல பிரதேசத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாக இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவு கண்டறிந்ததையடுத்து அவர்கள் இன்று (ஏப்ரல்,12) மன்னார் முலங்கவிலில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சுகாதார ஊழியர்களில், ராகமா வைத்தியசாலையிலிருந்து 22 பேரும், வெலிசரவிலிருந்து 5 பேரும் அடங்குகின்றனர், இதில் 22 ஆண்களும் ஐந்து பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

பூர்வாங்க சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் முலாங்கவிலில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.