புத்தாண்டு கொண்டாட்டங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன - பொலிஸ்

ஏப்ரல் 12, 2020
  •  ஒன்று கூடலை தவிர்த்து புத்தாண்டை வீட்டிலேயே கொண்டாடுமாறு பொலிஸார் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை கருதிக்கொண்டு ஊரடங்கு வேளையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இப்புத்தாண்டு வேளையில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகமான நடமாடும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு நாட்களில் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.