எல்ஓஎல்சி நிறுவனத்தினால் கிருமி நீக்கும் உபகரணங்கள், முகக் கவசங்கள், தொற்று நீக்கிகள் என்பன நன்கொடை

ஏப்ரல் 12, 2020

எல்ஓஎல்சி நிறுவனம் மனுஷத் தெரனவுடன் இணைந்து 75 கிருமி நீக்கும் உபகரணங்கள், 06முகக் கவசங்கள் மற்றும் 06 தொற்று நீக்கிகள் கலன்கள் என்பவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை பொருட்கள் இம்மாதம் 10ம் திகதி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளித்தது.

இந்த நிகழ்வில் எல்ஓஎல்சி நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி கித்சிறி குணரத்ன, பிரதம விற்பனை மற்றும் தொடர்பாடல் அதிகாரி சுசன் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.