கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயலாற்ற பாதுகாப்பு அமைச்சிற்கு ஹுவாவி நிறுவனம் டிஜிட்டல் தீர்வுகள் அளிப்பு

ஏப்ரல் 12, 2020

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயலாற்ற உலகின் முதற்தர தகவல் தொடர்பாடல் நிறுவனமான ஹுவாவி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சிற்கு டிஜிட்டல் கருவிகளை வழங்கியது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுடன் இடம்பெற்ற சந்திப்பில், ஹுவாவி நிறுவன அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயலாற்ற, செயற்கை நுண்ணறிவு மருத்துவ பகுப்பாய்வு மற்றும் உலகலாவிய அனுபவங்களை பாதுகாப்பு அமைச்சுடன் பகிர்ந்து கொள்ளல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சு அதன் நிறுவனங்களுடன் வினைத்திறனான கூட்டங்களை நடாத்தும் வகையில் உயர் ரக வீடியோ தொடர்பாடல் கருவிகளை பாதுகப்பு அமைச்சில் நிறுவுவதற்கு ஹுவாவி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த சந்திப்பில் ஹுவாவி நிறுவனத்தின் பணிப்பாளர் ஸிங்குவோஷொங், தலைமை நிர்வாக அதிகாரி லியாங் யி மற்றும் உப தலைவர் இந்திக டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.