கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக வரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்ஷக லங்கா நிறுவனத்தினால் ரூ. 3 மில்லியன் நன்கொடை

ஏப்ரல் 12, 2020

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றான நாட்டில் முதற்தர பாதுகாப்பு சேவை வழங்கும் வரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்ஷக லங்கா நிறுவனத்தினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ. 3 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த நன்கொடையளிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்ஷக லங்கா நிறுவனத்தின் தலைவர் மேஜர் (ஓய்வு) விஜித் வெலிகல, தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் (ஓய்வு) துலத் விஜயதிலக மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் கேர்ணல் (ஓய்வு) திலக் பணகொட ஆகியோர் இணைந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான காசோலையை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளித்தனர்.