யாழில் படையினரால் தேவையுடைய மக்களுக்கு சமைத்த உணவுகள் விநியோகம்

ஏப்ரல் 13, 2020

யாழ்குடா நாட்டில் தேவையுடைய வறிய மக்களுக்கு யாழ் பாதுகாப்பு படையினரால் 300 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவியளிக்கும் வகையில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 21ம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.