இலங்கை கடற்படையின் பூச தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 9 பேர் தனிமைப்படுத்தலின் பின் வெளியேற்றம்

ஏப்ரல் 13, 2020

இலங்கை கடற்படையினரின் பூசை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மேலும் 9 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்றைய தினம் (ஏப்ரல், 13) வெளியேறிச் சென்றனர்.

அவர்கள், தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு செல்லும் முன் 'PCR பரிசோதனைக்கு' உட்படுத்தப்பட்டனர்.

இன்றையதினம் வீடு திரும்பிய 9 பேருடன் சேர்த்து கடற்படையினரின் பூச தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தனிமைப்படுத்தலின் பின்னர் வெளியேறி சென்றவர்களின் எண்ணிக்கை 57 ஆக பதிவாகியது.

தற்போது 32 பேர் இத் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.