கடற் படையினரால் ஜா- எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 13, 2020

ஜா-எல மற்றும் ராகம பிரதேசங்களிலிருந்து மேலும் 32 பேர் கடற்படையின் நாச்சிக்குடா தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் (ஏப்ரல்,13) அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள், ஜா-எல, சுது வெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜா-எல, சுது வெல்ல பகுதியில் ஏப்ரல், 9ம் திகதி புலனாய்வு நடவடிக்கையின் பின்னர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 28 பேர் இலங்கை கடற்படையினரால்  அடையாளம் காணப்பட்டனர்.

ஏப்ரல் 11ம் திகதி, ஜா-எல மற்றும் மக்கேவிட்ட பகுதியில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 52 பேருக்கும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டது.