வடக்கு இராணுவத்தினர் “பொங்கல்” திருவிழாவில் இணைவு
ஜனவரி 18, 2019வட பிராந்தியத்திலுள்ள இலங்கை இராணுவத்தினர் சமூக நலன்புரி நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து “தை பொங்கல்” திருநாளை கொண்டாடியுள்ளனர். இராணுவத்தினரால் இப்பிராந்தியத்தின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், வட்டுக்கோட்டை சங்கரதை ஸ்ரீ பத்திரகாளி கோவில் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது, குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த 100 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களும், 26 சிவில் மாற்றுத்திரனாளிகளுக்கு ஊன்றுகோல்கள் மற்றும் சக்கர நாற்காலி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் இப்பிராந்தியத்திலுள்ள பொதுமக்கள் மத்தியில் 1000 தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிராந்தியங்களிலுள்ள படை வீரர்களாலும் இவ்வாறான பல்வேறு சமூக நலன்புரி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், மத வழிபாடுகளுக்கு வருகைதந்த பக்தர்களுக்கு இலவச உணவு, குறைந்த வருமானம் பெரும் குடுப்பாங்களுக்கு உலருணவு பொதிகள் ஆகியவற்றை வழங்கியதுடன், விளையாட்டு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், கோவில் வளாகத்தினை சுத்தம் செய்யும் வகையிலான சிரமதானப்பணிகளையும் மேற்கொண்டனர். இன் நலன்புரி நிகழ்வுகளில் ஒரு பகுதியாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகூடிய புள்ளியினைப் பெற்ற பாலம்பை கல்லூரி மாணவி ஆர். துர்கான விற்கு பண உதவி மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் ஆகியனவும் வழங்கிவைக்கப்படன.
தை பொங்கலானது தமிழ் சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாவாகும். இத்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி, 15) கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.