இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரிப்பு

ஏப்ரல் 14, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. இன்று   பூனானை  தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்தை அடுத்தே இவ்வாறு அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட எட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் ஏழு பேர் பேருவலை பகுதியில் வசிப்பவர்கள். அவர்கள் பூனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இன்று அடையாளம் காணப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரும் பேருவலை பகுதியில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.