நாளை 19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும்

ஏப்ரல் 15, 2020

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம், நாட்டின் ஆபத்தான வலயங்கள் தவிர்ந்த19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு விதிக்கப்படவுள்ளது.

எனினும் ஆபத்தான வளையங்களாக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் உட்பட இரத்தினபுரி மற்றும் பெல்மடுள்ள பொலிஸ் பிரிவு ஆகிய பிரதேசங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.