பரந்துபட்ட திட்டமிடல் காரணமாக இலங்கை கடற்படையினரால் போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது - கடற்படை தளபதி

ஏப்ரல் 15, 2020

* 3200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு

* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள வேலையிலும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைள் கைவிடப்படவில்லை.

* நாட்டுக்குள் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க மீனவ சமூகத்தின் ஒத்துழைப்பைக் கோரப்படுகிறது.

* இதுவரை 21 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு

* போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை அழித்தொழிக்க இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும

நவீன தொழில்நுட்ப பயன்பாடு, சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் கடற்படை உளவுத்துறை செயற்பாடு உள்ளிட்ட ஒன்றிணைக்கப்பட்ட திட்டமிடல் நடவடிக்கைகளே, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக முறியடிக்க காரணம் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைப்பற்றப்பட்ட 3,200 மில்லியன் ரூபா பெறுமதியான 281 கிலோ ஹெரோயின் மற்றும் 48 கிலோ கிரிஸ்டல் மெதம்பீட்டமைன் (ஐஸ்) போதைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி சில்வா, நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு எதிராக துணிவோடு செயற்படுவதற்கு இலங்கை கடற்படையினருக்கு ஊக்கமளிக்கும் நாட்டின் அரசியல் தலைமைகளின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பு மிகுந்த செயற்பாடுகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு திட்டமிடல் செயல்பாட்டில், போதைப்பொருள் மற்றும் குற்ற தடுப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் முக்கிய செயற்கைக்கோள் படங்களை அணுகுவதற்கான உதவிகளை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவும் மிக முக்கிய பங்கு வகித்தார், ”என கடற்படைத் தளபதி இன்று (ஏப்ரல்,15) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 

 

பெருமளவிலான போதைப் பொருட்களுடன் மார்ச் 28ம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கை கடற்படையினரால் குறித்த போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச புலனாய்வு துறையின் பகுப்பாய்வு மூலம், போதைப்பொருள் ஏற்றப்பட்ட மற்றொரு கப்பல் இலங்கைக்கு வருவதை இலங்கை கடற்படை கண்டறிந்தது.

இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க சர்வதேச கடலில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் தொடர்ந்து தேடுதல் மற்றும் ஒடுக்குமுறைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என கடற்படை தளபதி தெரிவித்தார்.

இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளையும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தையும் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்துகிறது. போதைப்பொருள் விநியோக வலையமைப்பு தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்காளிகளுக்கு வலுவான அழுத்தம் கொடுக்க இலங்கை கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பதில் மீனவ சமூகம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களின் ஒத்துழைப்பு இந்நடவடிக்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார். 

 

 

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பதில் மீனவ சமூகம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களின் ஒத்துழைப்பு இந்நடவடிக்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் போதைப்பொருளை ஒழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழு பங்களிப்பை வழங்கும் வகையில் இலங்கை கடற்படை, 2020 ஆண்டின் முதல் காலாண்டில் 718 கிலோ ஹெரோயின், 797 கிலோ கிரிஸ்டல் மெதம்பீடமைன், 581 கிலோ கீட்டமைன் மற்றும் 2,475 கிலோ கேரள கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் பொருட்களின் மொத்த பெறுமதி 21 பில்லியன் ரூபாவாகும்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், கப்பல் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு பாகிஸ்தானியர்கள் மற்றும் மூன்று ஈரானியர்கள் உள்ளிட்ட ஏழு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

துறைமுகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் கப்பலை கடற்படை தளபதியுடன் கடற்படை அதிகாரிகள், பொலிஸ் போதை பொருள் பணியாக சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.