கொழும்பைச் சேர்ந்த நூறுபேர் இலங்கை கடற்படையினரால் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

ஏப்ரல் 15, 2020

கொழும்பின் கிராண்ட்பாஸ், குணசிங்கபுர, நகலன் வீதி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேலும்100 பேர் இலங்கை கடற்படையினரின் மேற்பார்வையின் கீழ் உள்ள சம்பூர் மற்றும் புனாணி தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள், ஜா-எல மற்றும் சுதுவெல்ல இப்பகுதியில் உள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டவர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இவர்கள், சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் என புலனாய்வு பிரிவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.