வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு உதவியளிக்க 24 மணி நேர தொலைபேசி சேவை

ஏப்ரல் 16, 2020

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் 24 மணிநேர அவசரகால தொலைபேசி சேவையினை செயல்படுத்துமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தல் இலங்கை பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு வசதியாக ஒன்லைன் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் உள்ள சமூகங்களிடையே அமைச்சினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.