பூச தனிமைப்படுத்த மையத்திலிருந்து தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த பதினொருவர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 16, 2020

இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் இந்த தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 14 நாட்களைக் கொண்ட தமது தனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்த மேலும் பதினொரு பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
குறித்த நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் பூச தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 68 பேர் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் 31 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.