இலங்கை கடற்படையினர் நோய்வாய்ப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சிகிச்சைக்காக அழைத்து வருகை

ஏப்ரல் 16, 2020

வர்த்தக கப்பல் ஒன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவி அளித்துள்ளனர்.

இலங்கையில் செயல்படும் உள்நாட்டு முகவரகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படையினரின் உதவியுடன் நோயாளியை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

‘மேன்கர்’ வணிக கப்பலில் இருந்த நோயாளியான வெளிநாட்டுப் பிரஜை இலங்கை கடற்படையின் இரசாயனவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால் கரைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.