வண. மீகொட அபயதிஸ்ஸ தேரோவினால் இராணுவத்தினருக்கு 4000 முகக் கவசங்கள் அன்பளிப்பு

ஏப்ரல் 16, 2020

பெபிலியன, சுனேத்ரா தேவி ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. பேராசிரியர் மீகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரினால் சுமார் 4000 முகக் கவசங்கள் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது. முகக் கவசங்களை கையளிக்கும் இந்த நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

நாயக்க தேரரினால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட இந்த முகக் கவசங்களானது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னணியில் நின்று செயற்படும் முப்படை வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என இராணுவத்தளபதி தெரிவித்தார்.