நாளை முதல் காய்கறிகளை வாங்கி விநியோகிக்கவுள்ள சிவில் பாதுகாப்பு படையினர்

ஏப்ரல் 16, 2020

நாளை முதல் விவசாயிகளிடம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறி வகைகளை விநியோகிக்க உள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் ரியர் அட்மிரல்(ஓய்வு) ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விவசாய சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் வகையில் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்ய முடியாது இருக்கும் மரக்கறி வகைகளை நேரடியாக சென்று கொள்வனவு செய்யும் வேலைத்திட்டமொன்றை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது அவர் ஊடகங்களிடம் நேற்று தெரிவித்தார்.

நாளை முதல் அறுவடை செய்யப்பட்ட மரக்கறி வகைகளை ஊவா பரணகம மற்றும் வெளிமடை பிரதேசத்திலுள்ள சிவில் பாதுகாப்பு படை வினியோக நிலையங்களுக்கு எடுத்து வருமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.