3,720 க்கும் மேற்பட்டோர் 14 நாள் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துள்ளனர்

ஏப்ரல் 16, 2020
முப்படையினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை சுமார் 3,721 பேர் தங்களது கட்டாய தனிமைப்படுத்தல் காலப்பகுதியை பூர்த்தி செய்து வெளியேறி உள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் இன்று ( ஏப்ரல் 16) தெரிவித்தார்.
 
இறுதி மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கிய பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.