கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

ஏப்ரல் 16, 2020
கிளிநொச்சி, குரக்கன் கட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 32 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படையின் 57வது பிரிவின் படைவீரர்களினால் சனிக்கிழமையன்று வழங்கிவைக்கப்பட்டது.
 
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தேவையற்ற கூட்டங்கள் அல்லது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.