பாலாவியில் இலங்கை விமானப் படையினரின் இரத்ததான நிகழ்வு

ஏப்ரல் 16, 2020
பாலாவி விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படையினர் இரத்த வங்கியில் இரத்த மாதிரிகளின் இருப்பை பேணும் வகையில் இரத்ததான நிகழ்வு ஒன்றினை நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தனர்.
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வழங்கும் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியின் இரத்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்புவழங்கும் நோக்கில் இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.