வன்னியிலுள்ள 120க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இரத்த தானம்

ஏப்ரல் 17, 2020

வன்னியிலுள்ள 62 ஆவது பிரிவின் படைவீரர்கள், தாமாக முன்வந்து இரத்ததான முகாம் ஒன்றினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர். அவசர நிலைமைகளின் போது
வன்னி வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த மாதிரிகளுக்கான கட்டுப்பாட்டினை நீக்கும் வகையில் குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரத்ததான முகாம், அனுராதபுரம் பொது வைத்தியசாலை மற்றும் பதவிய ஆதார வைத்தியசாலையின் மருத்துவ குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரத்ததான முகாமிற்கு 62 ஆவது பிரிவின் இராணுவ மருத்துவ குழுவினது உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.