--> -->

133 மில்லியன் ரூபா பெறுமதியான சீனாவின் மருத்துவ உதவி பொருட்கள் இன்று கொழும்பு வரவுள்ளது

ஏப்ரல் 17, 2020

சீன அரசாங்கத்தினால் நன்கொடை வழங்கப்பட்ட 693,191.2 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் கொழும்பை  வந்தடையவுள்ளது.

சீன அரசாங்கத்தால் நன்கொடை வழங்கப்பட்ட மருத்துவ பொருட்கள் சீனாவின் ஈஸ்டன் ஏர்லைன்ஸ் MU231 மூலம் இன்று மாலை கொழும்பை வந்தடையவுள்ளன.

இந்த மருத்துவ உதவி பொருட்களில் 20,016 புதிய கொரோனா பரிசோதனை (2019-nCoV) நியூக்ளிக் அமிலம் கண்டறியும் கருவிகள் (PCR-பரிசோதனை திரவங்கள் ), 10,000 மருத்துவ பாதுகாப்பு முகக் கவசங்கள் (வடிகட்டுதல் விகிதம் > 95%), 100,000 அறுவை சிகிச்சை முகக் கவசங்கள்(3 அடுக்குகளை கொண்டவை), 10,000 பாதுகாப்பு முழு ஆடைகள், 1,000 மருத்துவ பிளாஸ்டிக் கண்ணாடிகள் மற்றும் 50,000 சோடி ஒருமுறை பயன்படுத்தத்தக்க அறுவை சிகிச்சை கையுறைகள் ஆகியன உள்ளடங்கி இருப்பதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன தூதரகம், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடும் மருத்துவ அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த மருத்துவ பொருட்களை இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்குவதாக சீனத் தூதரக ஊடக பேச்சாளரும் அரசியல் பிரிவின் தலைவருமான லுவோ சொங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.