தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்த மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி - வைத்தியர் அணில் ஜாசிங்க

ஏப்ரல் 17, 2020
  • கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் மொத்த எண்ணிக்கை 242 ஆக உயர்வு

மேலும் நான்கு பேருக்கு தோற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்வடைந்து உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தொட்டு உறுதிபடுத்தப்பட்ட நான்கு பேரும் பெண்களாவர். இவர்கள் புனானி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தி லுக்கு உட்பட்டு வந்தவர்கள் என ராஜகிரிய, கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், இன்றைய தினம் சுமார் 130க்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.