செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இல்லாத 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது

ஏப்ரல் 18, 2020

திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர், கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்துக்கிடமான படகினை பின்தொடர்ந்து சென்ற இலங்கை கடற்படையினர் குறித்த நபர்களை கடலில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களுடன் மீன்பிடிப் படகு, சுழியோடிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் 44 கிலோ கிராம் மீன்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

திருகோணமலை கடற்தொழில் திணைக்களஉதவிப் பணிப்பாளரினால் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.