கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடைய மேலும் அறுவர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

ஏப்ரல் 18, 2020

கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்பினை பேணிய மேலும் ஆறு பேர் வெளிசர சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இலங்கை கடற்படையினரால் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை மற்றும் புஞ்சி - பொரள்ள பகுதிகளில் வசிக்கும் ஆறு பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.