ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய 1392 பேர் இன்று கைது

ஏப்ரல் 18, 2020
  • 381 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

இன்றைய தினம் ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய சுமார் 1392 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 381 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ச் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 31,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8,151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டஉள்ளமை குறிப்பிடத்தக்கது.