தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட மேலும் நால்வருக்கு வைரஸ் தொற்று உறுதி- வைத்தியர் அணில் ஜாசிங்க

ஏப்ரல் 18, 2020
  • கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று பதிவானதை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மூவரும் வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் இன்று பதிவானவர்களில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.