ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளவும்- ஜனாதிபதி ராஜபக்ஷ

ஏப்ரல் 19, 2020

பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சமூகத்தின் பாதுகாப்பிற்காக பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதன் நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும்கட்டியெழுப்புவதற்காகும் இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் செயற்பாடுகளும் இதற்கு இணையாக மேற்கொள்ளப்படுமென அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.