முல்லைத்தீவு விவசாயிகளினது அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் தென்பகுதிகளுக்கு இராணுவத்தினரால் அனுப்பி வைப்பு

ஏப்ரல் 20, 2020

முல்லைத்தீவு விவசாயிகளினால் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை தென்பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை முல்லைத்தீவு படையினர் ஏற்படுத்தி கொடுத்தனர்.

முல்லைதீவு பாதுகாப்பு படை தலையகத்தின் புதுக்குடியிருப்பில் உள்ள 68வது பிரிவினரால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, முல்லைத்தீவு விவசாயிகளினால் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் கொழும்பு மற்றும் களுத்துறை பகுதிகளுக்கு இராணுவத்தினரின் வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

மொத்தமாக கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகள் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் குறித்த விவசாயிகளுக்கு 68வது பிரிவின் அதிகாரிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படை த் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய 68வது பிரிவின் அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.