தேவையுடைய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 'ஹெல ரணவிரு பலமுலுவ'வினால் அரிசி மற்றும் மரக்கறிகள் நன்கொடை

ஏப்ரல் 20, 2020

மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் 'ஹெல ரணவிரு பலமுலுவ' நிறுவனத்தினால் கொழும்பிலுள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ஒரு தொகை அரிசி மற்றும் மரக்கறிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கமைய, 3750 கிலோ கிராம் அரிசி மற்றும் 1000 கிலோ கிராம் மரக்கறிகள் ஆகியன குறித்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.