புனானி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து மேலும் 49 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 20, 2020

புனானி தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட மேலும் 49 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் முன்னர் ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.