படையினரால் யாழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகம்

ஏப்ரல் 20, 2020

யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு சமைத்த உணவுப் பொதி மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பனவற்றை விநியோகிக்கும் விஷேட வேலைத்திட்டம் ஒன்று யாழிலுள்ள படையினரால் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தேவையுடைய சமூகங்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்கும் குறித்த இந்த செயல் திட்டம், தெல்லிப்பழை மற்றும் வேலனி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.