மேலும் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

ஏப்ரல் 21, 2020

தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய , தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த ஐவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய மற்றொருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.