வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர விஷேட விமானங்கள்

ஏப்ரல் 21, 2020

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 433 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வர விஷேட விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடுகளுக்கிடையிலான பயணங்கள் தடைசெய்யப்பட்டமையினால் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு அழைத்து வர இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை விமான சேவை விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படும் இம்மாணவர்கள், சுகாதார அதிகாரிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளாதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.