பேலியகொட மீன் வர்த்தக சந்தையின் செயற்பாடுகளுக்கு மூன்று நாட்கள் தடை

ஏப்ரல் 21, 2020

பேலியகொட மீன் வர்த்தக சந்தையின் செயற்பாடுகளை நாளை முதல் மூன்று நாட்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த வியாபாரி சென்ற இடங்களை மூடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மீன் சந்தை விற்பனை கூடங்களின் உறிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் நாளை, பீசீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பவுள்ளனர்.