திருகோணமலையில் டெங்கு பெருகும் இடங்களை கண்டறிய படையினர் உதவி

ஏப்ரல் 22, 2020

திருகோணமலை, மனையாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு நுளம்புகள் இனம்பெருகும் இடத்தினை தேடி அழிக்கும் வகையில் வீடு வீடாக சோதனையிடும்
பணிகளில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து படைவீரர்களும் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது ஐந்து வீடுகளில் டெங்கு நுளம்பு இனம் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.