அண்டஸன் மற்றும் லேக்விவ் தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரால் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு

ஏப்ரல் 22, 2020

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும் தொடரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் இசை குழுவினரால் மேலும் இரண்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கமைய, திம்பிரிகஸ்யாய அண்டர்சன் தொடர்மாடி குடியிருப்பு பகுதி, அங்கோடை, லேக்விவ் தொடர்மாடி குடியிருப்பு பகுதி ஆகியவற்றிலும் இருவேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

வீடுகளுக்குள் இருக்கும் பொதுமக்களின் மனஅழுத்தம் மற்றும் சலிப்புத் தன்மை ஆகியவற்றை தணிக்கும் வகைகள் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த இசை நிகழ்ச்சியில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடல்கள் இசைக்கப்பட்டன. இதன்போது பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து கரகோஷம் எழுப்பி நடனமாடி, கைகளை அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.