பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் மற்றும் முப்படையினர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைப்பு
ஏப்ரல் 22, 2020பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய 106 பயணிகள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் பயிற்சி நடவடிக்கைளுக்காக சென்றிருந்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட 106 பேர் லாஹூரிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்கள், புனானி மற்றும் வைக்கல் டொல்பின் ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்ஸின் UL 1206 விமானத்தின் மூலம் இலங்கைக்கு அழைக்கு வரப்பட்டவர்களில் உயர்கல்வி நடவடிக்கைளுக்கு சென்றிருந்த 24 மாணவர்களும் பயிற்சி நடவடிக்கைளுக்காக சென்றிருந்த 82 படைவீரர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வைரஸ் பரவல் அச்சம் காரணமாக விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டதன் காரணமாக முப்படை வீரர்கள் பாக்கிஸ்தானில் ஒரு மாத காலத்திற்கு மேலாக தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.