பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

ஏப்ரல் 23, 2020

பொலனறுவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அங்கு 12 கிராமங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக லங்கபுற பிரதேச செயலாளர், இந்திக கருணாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை கிராமங்களுக்குள் உள்நுழையவும் அல்லது வெளியேறிச் செல்லவோஅனுமதிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார். இதற்கமைய, பட்டுன்னுகம, அபயபுர, சோமபுர, கக்கலுகம, சங்கபோதிகம, புலஸ்திகம, தம்பாளை, அல் ஹிலால் புர, அல் ரிபாயி புர, வீரபுர, லங்காபுர, மற்றும் பௌத்தர்நகம ஆகிய கிராமங்களில் இவருக்கும் ஒரு நிலையோ அல்லது வழியே ஏறிச் செல்லவோ அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.