இந்தியாவிலிருந்து 101 மாணவர்கைளை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் அழைத்து வருகை

ஏப்ரல் 23, 2020


101 மாணவர்களைக் கொண்ட குழுவினர் இந்தியாவிலிருந்து இன்று (ஏப்ரல்,23) மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை வந்தடைந்த இந்த மாணவர்கள், தனிமைப்படுத்தல் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.